பாரம் துாக்கியில் சிக்கித்தவித்த பிரான்ஸ் ஈபிள் கோபுர ஊழியர்கள்

#France #France Tamil News #Workers #EiffelTower
Mugunthan Mugunthan
2 months ago
பாரம் துாக்கியில் சிக்கித்தவித்த பிரான்ஸ் ஈபிள் கோபுர ஊழியர்கள்

ஈஃபிள் கோபுர ஊழியர்கள் கோபுரத்துக்கு நடுவே சிக்குண்டு இரவு முழுவதும் தவித்துள்ளனர். இச்சம்பவம் இடம் பெற்று பத்து நாட்களுக்கு மேலாகியுள்ள நிலையில், அது தொடர்பான தகவல்கள் தற்போதே வெளியாகியுள்ளன.

 ஈஃபிள் கோபுரத்தின் இரண்டாவது தளத்தில் பயணிபுரியும் ஊழியர்கள் மூவர், பெப்ரவரி 16 - 17 ஆம் திகதிக்குட்பட்ட இரவில், கோபுரத்தில் இருந்து கீழே இறக்க முற்பட்டனர். பாரம்தூக்கியில் அவர்கள் கீழிறங்க முயற்சித்த வேளையில் அவர்கள் பாரம்தூக்கிக்கிக்குள் சிக்கிக்கொண்டனர். 

பாரம் தூக்கி இயங்க மறுத்தது. அதிகாலை 3.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை அவர்கள் அங்கு சிக்கிக்கொள்ள நேர்ந்தது. தீயணைப்பு படையினர் உடனடியாக அழைக்கப்பட்ட போதும், மீண்டும் பணி மிகுந்த சவாலாக இருந்தது. கிட்டத்தட்ட நான்கரை மணிநேரங்களின் பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.