கனடாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் - ஆறு இலங்கையர்கள் பலி
கனேடிய தலைநகரின் தெற்குப் பகுதியில் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றுமொரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த அனைவரும் இலங்கையர்கள் என ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
தந்தை உயிர் பிழைத்ததாகவும், ஆனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் கூறிய உயர் ஸ்தானிகர், இலங்கையில் உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது இதுவரையில் தெரியவரவில்லை. உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் மற்றும் வயது என்பன தொடர்பில் அதிகாரிகள் தகவல் வெளியிடவில்லை.
Barrhaven பகுதியில் உள்ள வீட்டிற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த மரணங்கள் உள்நாட்டு அல்லது நெருங்கிய கூட்டாளி வன்முறையின் விளைவாகும் என்று பொலிஸார் நம்பவில்லை,
ஆனால் அவர்கள் இன்னும் சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான உறவைத் தீர்மானிக்க முயற்சிக்கிறார்கள்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.