அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்

#India #Test #England #Player #Record
Prasu
2 years ago
அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்

முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வோர்ன் ஆகியோருக்குப் பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையினை இங்கிலாந்தின் முன்னணி பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.

அதேநேரம், 700 விக்கெட்டுகளுடன் டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையினையும் அவர் பெற்றார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஐந்தாவதும் மற்றும் இறுயுமான டெஸ்டின் 3 ஆவது நாள் ஆட்டம் தர்மசாலாவில் ஆரம்பித்தது.

இதன்போது, இந்திய அணியின் குல்தீவ் யாதவ்வை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் ஆண்டர்சன் டெஸ்ட் அரங்கில் தனது 700 விக்கெட்டை கைப்பற்றினர்.

வேகப்பந்து வீச்சாளர் 698 விக்கெட்டுகளுடன் இந்தியாவுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

அவர், நேற்றைய தினம் இந்திய அணி சார்பில் சதம் அடித்த ஷுப்மன் கில்லை ஆட்டமிழக்கச் செய்து, தனது 699 டெஸ்ட் விக்கெட்டினை கைப்பற்றினார்.

 இந் நிலையில் இன்று 30 ஓட்டங்களை எடுத்திருந்த குல்தீப் யாதவை ஆட்டமிழக்கச் செய்து டெஸ்ட் அரங்கில் தனது 700 ஆவது விக்கெட்டினை கைப்பற்றினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4