பல வருடங்கள் கழித்து வெங்கட் பிரபுவுடன் இணையும் நடிகை திரிஷா

#Actor #Actress #TamilCinema #Director #Movie #Kollywood
Prasu
2 years ago
பல வருடங்கள் கழித்து வெங்கட் பிரபுவுடன் இணையும் நடிகை திரிஷா

இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் சைன்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வருவதாக தெரிகிறது. 

விஜய் இத்திரைப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். ஒன்று முதுமை தோற்றமும் மற்றொன்று இளமை தோற்றம் ஆகும்.

நடிகர் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி என்று பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். மே மாதம் படத்தை வெளியிடுவதற்காக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

இந்நிலையில் திரிஷா கோட் படத்தில் நடிக்கவுள்ளார். இரண்டு நாட்கள் இப்படத்திற்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் இன்று கோட் பட ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்திற்கு அடுத்து நடிகை திரிஷா மீண்டும் வெங்கட் பிரபு படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4