நிலநடுக்கத்தில் சிக்கிய பிரபல இயக்குநர் ராஜமவுலி

#China #TamilCinema #Earthquake #Director #Movies
Prasu
2 years ago
நிலநடுக்கத்தில் சிக்கிய பிரபல இயக்குநர் ராஜமவுலி

மகன் கார்த்திகேயாவுடன் இயக்குநர் ராஜமவுலி தற்போது ஜப்பானில் உள்ளார். அங்கு இன்று அதிகாலையில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும் அப்பாவுடன் 28 -வது மாடியில் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தோம் என்றும் அவரது மகன் கார்த்திகேயா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது, 'ஜப்பானில் இப்போது பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. நாங்கள் 28வது மாடியில் இருந்ததால், தரை மெதுவாக நகர ஆரம்பித்தது. 

இது நிலநடுக்கம் என்பதை உணர எங்களுக்கு சிறிது நேரம் பிடித்தது. நாங்கள் அனைவரும் பயத்தில் இருந்தோம். ஆனால், சுற்றியிருந்த ஜப்பானியர்கள் எல்லாம் மழை பெய்ய ஆரம்பித்தது போல் அசையவில்லை' எனச் சொல்லி தனது ஸ்மார்ட் வாட்சில் நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கை வந்த குறுஞ்செய்தியையும் புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். 

கடந்த வாரத்தில் ஜப்பானில் ரிக்டர் அளவுகோலில் 6 எனப் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4