ஓயில் ஏற்றிவந்த கொள்கலன் வீதியில் குடைசாய்ந்து விபத்து!
#SriLanka
#Accident
#Road
Soruban
2 years ago
ஓயில் ஏற்றிவந்த கனரக வாகன கொள்கலன் ஒன்று மிருசுவில் சந்திக்கும் கொடிகாமம் பிரதேச வைத்திய சாலைக்கும் இடைப்பட்ட ஏ ஒன்பது பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளகியுள்ளது. யாழ்பாணம் மிருசுவில் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனால் ஏ ஒன்பது வீதியினூடான போக்குவரத்து காலை 5:30 மணியிலிருந்து 6:30 மணிவரை தடங்கல் ஏற்பட்டு தற்போது மாற்று வழியினூடான போக்குவரத்து இடம் பெற்று வருகின்றது. குடைசாய்ந்த கொள்கலனிலிருந்து ஓயில் வீதியியில் சிந்திக்கொண்டிருக்கிறது இந்நிலையில் கொள்கலனை வீதியிலிருந்து அகற்றி போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் கொடிகாமம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே