யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத்தூதரகம் முற்றுகை!

#India #SriLanka #Protest #Fisherman
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணத்தில்  உள்ள இந்தியத்தூதரகம் முற்றுகை!

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

 இந்த போராட்டம் இந்திய இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை கடற்றொழிலாளர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர். இதனையடுத்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதுடன் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

images/content-image/2024/03/1711086593.jpg

 பொலிஸார் கடற்றொழிலாளர்களை சுமூகமான நிலைக்குள் கொண்டுவர முயன்றும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 அண்மை காலமாக தொடர்ச்சியாக தமது வளங்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் இதனை தடுத்து நிறுத்துமாறு கோரி கடற்றொழிலாளர்கள் இவ்வாறு தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4