உலக தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் எடிசன் திரை விருது சென்னையில்!

#SriLanka #Cinema
Mayoorikka
1 month ago
உலக தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் எடிசன் திரை விருது சென்னையில்!

உலகத் தமிழர்களினால் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாக்குகளை பெற்று நடைபெறும் எடிசன் திரை விருதுகள் விழா எதிர்வரும் 24 ஆம் திகதி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.

 இந்நிகழ்வில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியீடு கண்டு, திரைப்படங்கள் மற்றும் OTT தளங்களில் வெளியீடு கண்ட திரைத்துறை சார்ந்த நடிக, நடிகைகள், பின்னணி பாடகர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர்கள், கலை இயக்குனர்கள், சண்டைப்பயிற்சியாளர்கள், நடன இயக்குனர்கள் போன்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படவுள்ளனர்.

 இந்நிகழ்வில் கடந்த காலங்களில் எடிசன் திரை விருது பெற்றவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும், கனடா, அவுஸ்திரேலியா, மேலேசியா போன்ற நாடுகளிலிருந்து திரைக்கலைஞர்களும் ஜான்பிரிட்டோ நடனக் குழுவுடன் இணைந்து கலை நிகழ்வு நடத்தவுள்ளனர். 

 இந்நிகழ்வில் பார்வையாளர்களாக எடிசன் விருதுக்கு வாக்களித்த ரசிகர்கள் ஆவணத்தினைக் காட்டி பார்வையாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர் என எடிசன் விருதுக்கு குழுத் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.