கோலாகலமாக தொடங்கிய IPL தொடர்

#IPL #Cricket #sports #Chennai #Bengaluru
Prasu
2 years ago
கோலாகலமாக தொடங்கிய IPL தொடர்

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. 

இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் தொடக்க நாளான இன்று கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் பிரமாண்டமான தொடக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது 

அதன்படி இந்த தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமான், இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்ஷய்குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர் இசைவெள்ளத்துக்கு மத்தியில் ஆடிப்பாடி ரசிகர்களை மகிழ்விக்கின்றனர்.

 இந்நிலையில் ஐ.பி.எல் தொடரின் தொடக்க விழா தற்போது தொடங்கி உள்ளது .ஆடல் , பாடல் உள்ளிட்ட ;கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வரும் தொடக்க விழாவை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4