இவ்வாண்டின் முதல் சந்திரகிரகணம் இன்று நிகழ்கிறது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
இவ்வாண்டின் முதல் சந்திரகிரகணம் இன்று நிகழ்கிறது!

2024 ஆம் ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம் இன்று (25.3)  நிகழவுள்ளது. இன்று  பங்குனி உத்திரமும் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் சந்திர கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பின் தோன்றுகிறது.  

அதுமட்டுமின்றி இன்று ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதனால் இன்று வரும் சந்திர கிரகணம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது.

மேலும் சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில், சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்த சந்திர கிரகணம் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஆகும். இந்த சந்திர கிரகண நிகழ்வானது காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 4:39 மணிக்கு முடிவடைகிறது. பொதுவாக கிரகணத்தின் போது பல்வேறு விஷயங்கள் கடைபிடிக்கப்படும்.