திடீரென கேரளா சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
#Actor
#TamilCinema
#Kerala
#rajini kanth
#Movie
Prasu
2 hours ago
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகை தனது வீட்டில் கொண்டாடிய ரஜினிகாந்த், படப்பிடிப்புக்காக நேற்று கொச்சி சென்றுள்ளார். கேரளாவில் பெரிய நீர்வீழ்ச்சியான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் ஜெயிலர் 2 ஷூட்டிங் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் 2 படத்தில் ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
(வீடியோ இங்கே )