13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் - சித்தார்த்தன் எம்.பி

#SriLanka #Parliament #13th Amendment Act
Soruban
2 years ago
13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் - சித்தார்த்தன் எம்.பி

13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்வதில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டம் இருக்கின்றது. அது போதும் எனக் கூறவில்லை. ஆனால் அதை ஏற்றுக் கொள்வதில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எங்களுக்குள் பலர் அதை மறுக்கின்ற தன்மை இருந்தாலும் கூட இந்த 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு தொடர்ந்து வருகின்ற அரசுகள் எல்லாம் எவ்வளவு பின்னடிக்கின்றது என்பதை கண்கூடாக காண்கின்றோம்.

இந்த நிலையில் இதை விட நாம் பெரிதாக பெறுவோம் என்று சொல்லி படிப்படியாக எங்களுடைய இனம் அதாவது வடக்கு - கிழக்கு தமிழர்கள் எண்ணிக்கையில் குறைந்து கொண்டு வருகிறார்கள். இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வசதியாக கனடா விசா, லண்டன் விசா கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வருடத்தில் வடக்கு - கிழக்கில் இருந்து ஏறக்குறைய சுமார் 20 ஆயிரம் நாட்டை விட்டு சென்றுள்ளார்கள்.

ஆகவே, கையில் இருப்பதையாவது இறுக்கமாக பற்றி வடக்கு - கிழக்கை கட்டியெழுப்பும் முயற்சி எடுக்க வேண்டும். இது ஒரு ஜதார்த்தமான முடிவு. சரியான முடிவு எனச் சொல்லவில்லை. சரியான முடிவை நோக்கி செல்ல வேண்டும். அதன்போது இருப்பதை இறுக்க பற்றிக் கொள்ள வேண்டும் என்பது தான் உண்மையான நிலைப்பாடு.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் 5 கட்சிகள் ஒற்றுமையாக ஜனநாயக தமிழ் தேசியகக் கூட்டனி என்ற பெயரில் இயங்கி வருகின்றோம். ஒவ்வொரு காலத்திலும் தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்பட்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு காரணங்களுக்காக அந்த ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. அதில 90 வீதம் தேர்தலுக்காக தான். ஆனால் நாங்கள் தேர்தலுக்காக ஒற்றுமைப்படவில்லை. தேர்தலுக்கு முன்னரே இது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம்.

 தமிழ் மக்கள்து நியாயமான கோரிக்கைகளை நோக்கி நகர்வதற்காக ஒற்றுமையாக அமைக்கப்பட்ட அமைப்பு இது. தமிழ் தேசியப் பரப்பில் இருக்கக் கூடிய கட்சிகள் அனைத்தும் இதில் இணையக் கூடிய வகையில் தான் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஏனைய கட்சிகளும் இதில் வந்து இணைவார்கள். அந்த ஒற்றுமையின் மூலமே நியாயமான தீர்வை பெற முடியும். அதற்கு தான் மக்கள ஆதரவு கிடைக்கும். அதன் மக்களது அபிலாசைகளை அடைய முடியும் எனத் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4