பிரித்தானியாவில் இருந்து வேறு நாடுகளுக்கு இடம்பெயரும் செவிலியர்கள்!
பிரித்தானியாவில் ஏற்கனவே செவிலியர்களுக்கு பற்றாக்குறை காணப்படும் நிலையில், ஆண்டொன்றிற்கு சுமார் 9,000 செவிலியர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்குப் பணிக்குச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும், பிரித்தானியாவில் பணிபுரியும் 12,400 செவிலியர்கள், வெளிநாடுகளுக்குச் செல்லும் நோக்கில், certificate of current professional status (CCPS) என்னும் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.
ஒரு காலத்தில் பிரித்தானியாவில் நல்ல ஊதியம் கிடைக்கும் என பிரித்தானியாவுக்கு பணிக்கு வந்த செவிலியர்கள், பின்னர், அமெரிக்கா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
அங்கு பிரித்தானியாவைவிட இரண்டு மடங்கு அதிக ஊதியம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பாரிய அளவிலான செவிலியர்கள் இடம்பெயர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.