IPL - 185 ஓட்டங்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

#Delhi #IPL #T20 #Rajasthan #2024
Prasu
2 years ago
IPL - 185 ஓட்டங்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , பட்லர் ஆகியோர் களமிறங்கினர். 

தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சாம்சன் 15 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து பட்லர் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பின்னர் ரியான் பராக் , அஸ்வின் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். 

பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.அதிரடியாக ஆடிய அஸ்வின் 29 ரன்களுக்கு வெளியேறினார் . மறுபுறம் அதிரடி காட்டிய ரியான் பராக் அரைசதமடித்து அசத்தினார்.

அரைசதம் கடந்த பிறகு டெல்லி அணியின் பந்துவீச்சை அவர் துவம்சம் செய்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி185 ரன்கள் எடுத்தது. 

ரியான பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.தொடர்ந்து 186 ரன்கள் இலக்குடன் டெல்லி அணி விளையாடுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4