சுவிட்சர்லாந்தில் 24 வயது இளைஞருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை
சுவிட்சர்லாந்தில் ஆறு ஆண்டுகளாக இடம்பெற்று வந்த வழக்கு ஒன்றில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2018 இல் சூரிச்சில் பிரேசிலியர் ஒருவர் விலைமாதுவை கொலை செய்துள்ளார். கொலை முயற்சி வழக்கில் 24 வயது இளைஞருக்கு சுவிட்சர்லாந்தில் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரிச் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு சம்மந்தமான தீர்பே நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி கூறியது போல்இ குற்றவாளியை விசாரணை செய்ததில் பல சம்பவங்கள் வெளிவந்துள்ளதாக தெரிவித்தார்.
குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு சம்பவத்தை விபரித்துள்ளார். விலைமாதுவிடம் சென்ற குறித்த நபர் பெண்ணை இரண்டுமுறை மூச்சு திணற வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தான் கொலை செய்யும் நோக்கத்துடன் பெண்ணை அவ்வாறு செய்யவில்லை எனவும் அவரை மயக்க நிலைக்கு கொண்டு சென்று அவரிடம் இருந்து கொள்ளையடிப்பதற்கே இவ்வாறு செய்ததாகவும் குற்றவாளி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
24 வயதான பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் மரணம் நிகழ்ந்துள்ளது. தனது காதலி தன்னை விட்டு பிரிந்து சென்ற மறுநாளே விபசார பெண்ணிடம் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
எனினும் விலைமாதுவிடம் சென்றுவிட்டு உடலுறவு கொள்ளாமல் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட முயன்றமை நீதிபதி உட்பட பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
எனினும் குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவருக்கு 30இ000 பிராங்க் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி கூறினார். மேலும் 10 ஆண்டுகள் நாடுகடத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.