IPL - சென்னை அணிக்கு 192 ஓட்டங்கள் இலக்கு

#Delhi #IPL #T20 #Chennai #2024
Prasu
2 years ago
IPL - சென்னை அணிக்கு 192 ஓட்டங்கள் இலக்கு

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மார்ச் 31) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. டெல்லி அணிக்கு பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 43 மற்றும் 52 ரன்களை குவித்தனர். 

அடுத்த வந்த கேப்டன் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வந்தார். இவருடன் ஆடிய மிட்செல் மார்ஷ் 18 ரன்களிலும், ஸ்டப்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. 

போட்டி முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது. டெல்லி அணியில் அக்சர் பட்டேல், அபிஷேக் பொரெல் முறையே 7 மற்றும் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய பதிரானா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, முஸ்தஃபிசுர் ரகுமான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4