IPL - சென்னையை வீழ்த்திய டெல்லி அணி

#Delhi #IPL #T20 #Cricket #Chennai #2024
Prasu
1 month ago
IPL - சென்னையை வீழ்த்திய டெல்லி அணி

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மார்ச் 31) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

டெல்லி அணிக்கு பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 43 மற்றும் 52 ரன்களை குவித்தனர். அடுத்த வந்த கேப்டன் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வந்தார். 

இவருடன் ஆடிய மிட்செல் மார்ஷ் 18 ரன்களிலும், ஸ்டப்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. போட்டி முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது. 

இதையடுத்து 192 ரன்களை இலக்காக துரத்திய சென்னை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று விசாகப்பட்டினத்தில் இரவு நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெயிக்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. 

அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா , டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். 

இருவரும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதமடித்த டேவிட் வார்னர் 52 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து பிரித்வி ஷா 43 ரன்களில் வெளியேறினார். பின்னர் மிட்சேல் மார்ஷ் , ஸ்டப்ஸ் இருவரும் பதிரனா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

மறுபுறம் ரிஷப் பண்ட் நிலைத்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து பந்துகளை , பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்ட ரிஷப் பண்ட் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய பதிரனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான கெய்க்வாட் 1 மற்றும் ரச்சின் 2 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ரஹானே - டேரில் மிட்செல் இணை அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்களில் ரஹானே 45 ரன்களிலும், மிட்செல் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அடுத்து களமிறங்கிய வீரர்களில் துபே 18 ரன்களிலும், சமீர் ரிஸ்வி டக் அவுட் ஆகியும் ஏமாற்றம் அளித்தனர். இறுதி கட்டத்தில் தோனி அதிரடியாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்தார். முடிவில் சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி நடப்பு ஐ.பி.எல். தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதிரடியாக விளையாடிய தோனி 16 பந்துகளில் 37 ரன்களுடனும், ஜடேஜா 21ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

சென்னை அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா முறையே 1 மற்றும் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரஹானே மற்றும் டேரில் மிட்செல் ஜோடி பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. இருவரும் முறையே 45 மற்றும் 34 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபே 18 ரன்களில் ஆட்டமிழந்தார். சமீர் ரிஸ்வி முதல் பந்திலேயே பெவிலியன் திரும்பினார். பிறகு ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த எம்.எஸ். டோனி முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். இந்த ஜோடி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 

 போட்டி முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது. எம்.எஸ். டோனி 37 ரன்களுடனும், ஜடேஜா 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய டெல்லி அணி முதல் வெற்றியை ருசித்தது.