வவுனியாவில் தமிழ் மாமன்றம் நடாத்தும் தமிழ் மாருதம் 2024
#SriLanka
#Vavuniya
Mayoorikka
1 year ago

வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்தும் தமிழ் மாருதம் விழா 06ம்,7ம் திகதிகளில் வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ஏப்ரல் 06ஆம் திகதி மாலை 03.00 மணிக்கு வவுனியா விபுலானந்தர் சிலை முன்பிருந்து ஆரம்பமாகும் ஊர்வலம் வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தை வந்தடைந்து தமிழ் மாருதம் 2024 இன் முதல் நாள் அமர்வு ஆரம்பமாகவுள்ளது.
நடனம்,நாட்டியம், இசை என பல்துறை நாடக நிகழ்வுகளை உள்ளடக்கி இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வினை வவுனியாவின் திசையெட்டும் சென்று
பறை கொம்பிசைத்து கட்டியம் கூறி
மாருதத்திற்கான மரபுவழி அழைப்பினை தமிழ் மாமன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



