IPL - 181 ஓட்டங்கள் எடுத்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி

#IPL #T20 #Cricket #Lucknow #Bengaluru #2024
Prasu
2 years ago
IPL - 181 ஓட்டங்கள் எடுத்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

இதில் இன்று நடைபெற உள்ள 15-வது லீக் ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளிஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் , கே.எல்.ராகுல் களமிறங்கினர். 

தொடக்கத்தில் கே.எல்.ராகுல் 20 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து படிக்கல் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்டாய்னிஸ் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணியை மறுபுறம் தொடக்க வீரர் டி காக் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டி காக் அரைசதம் அடித்து அசத்தினார். 

அரைசதம் கடந்த பிறகு தொடர்ந்து அதிரடி காட்டிய டி காக் 56 பந்துகளில் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் .கடைசியில் நிக்கோலஸ் பூரன் சிக்சர்களை பறக்க விட்டார். அவர் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.

 இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 181 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட் , யாஷ் தயால் , சிராஜ் , டாப் லீ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர் .தொடர்ந்து 182 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4