IPL - 272 ஓட்டங்கள் குவித்த கொல்கத்தா அணி

#Delhi #T20 #Cricket #sports #Kolkatta #2024
Prasu
2 years ago
IPL - 272 ஓட்டங்கள் குவித்த கொல்கத்தா அணி

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

இதன்படி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. 

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக பில் சால்ட் , சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். தொடக்க விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில் பில் சால்ட் 18 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து ரகுவன்ஷி களமிறங்கினார். நரைன் , ரகுவன்ஷி இருவரும் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர் . குறிப்பாக நரைன் டெல்லி அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

நரைன் 21 பந்துகளிலும் , ரகுவன்ஷி 25 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். அரைசதம் கடந்த பிறகு நரைன் வாணவேடிக்கை காட்டினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய நரைன் 39 பந்துகளில் 89 ரன்களுக்கு (7 பவுண்டரி , 7 சிக்சர் )வெளியேறினார். 

பின்னர் ரகுவன்ஷி 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.தொடர்ந்து வந்த ரசல் , ரிங்கு சிங் இருவரும் அதிரடியை தொடர்ந்தனர். . ரசல் 41 ரன்களும் , ரிங்கு சிங் 26 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 272ரன்கள் எடுத்தது.

 டெல்லி அணி சார்பில் நோர்ஜே , இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 273 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் டெல்லி அணி விளையாடுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4