கனடாவில் திருடப்பட்ட 590 வாகனங்கள் 390 கொள்கலன்களில் டொராண்டோ துறைமுகத்தில் கண்டுபிடிப்பு
கனடா மொன்றியல் மாகாணத்தில் உள்ள துறைமுகத்தில் 390 கொள்கலன்களை உடைத்து சந்தேகத்தின் பேரில் சோதித்த போது 590 கார்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த கார்கள் திருடப்பட்டு மறைமுகமாக கடல் மார்க்கமாக அனுப்புவதற்கு வைக்கப்பட்டிருந்துள்ளது என தெரியவந்துள்ளது.
சில வருடங்களாக மொன்றியலில் மட்டுமின்றி கனடா முழுவதும் கார்கள் திருடப்படுகின்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஏற்கனவே இது தொடர்பான செய்திகள் எமது Lanka4 ஊடகத்தில் பிரசுரித்துள்ளோம்.
அந்த வகையில் திருடப்பட்ட கார்கள் தான் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டுள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இந்த கொள்கலன்கள் எந்த நாட்டிற்கு அனுப்பப்படுகிறது என்று தெரியவில்லை.
அதுமட்டுமன்றி சில நாட்களாக கார்கள் தவிர துவிச்சக்கரவண்டி,மோட்டார் வாகனங்கள் மற்றும் பல இயந்திரங்கள் திருடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தி Lanka4 ஊடகத்தின் பிரத்யோக செய்தியாக எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து வேறு தகவல்கள் விரைவில் நமது தலத்தில் அறிய தருவோம்