தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை பிரதேச ஆராய்ச்சி நிலையம்-திறந்து வைப்பு

#SriLanka #Douglas Devananda #Kilinochchi #Minister #Hydropower #Research
Prasu
2 years ago
தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை பிரதேச ஆராய்ச்சி நிலையம்-திறந்து வைப்பு

கிளிநொச்சி மாவட்ட பூநகரி பள்ளிக்குடா தெளிகரை பகுதியில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை பிரதேச ஆராய்ச்சி நிலையம் ஒன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்த்திற்குட்பட்ட பூநகரி பள்ளிக்குடா தெளிகரை பிரதேசத்தில் இன்று தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை பிரதேச ஆராய்ச்சி நிலையம் ஒன்று நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (நாரா)பிராந்திய ஆய்வு நிலையம் வடமாகாண கடல்தொழில் இராஜாங்க அமைச்சர் கெளரவ பியல் நிஷாந்த த சில்வா அவர்களின் அழைப்பில் கடல்தொழில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (நாரா)பிராந்திய ஆய்வு நிலையம் வடமாகாண கடல்தொழில் இராஜாங்க அமைச்சர் கெளரவ பியல் நிஷாந்த த சில்வா மற்றும் கிளிநொச்சி, யாழ்ப்பாணம்,வ்வுனியா,மன்னார்,முல்லைத்தீவு ,ஆகிய மாவட்டங்களின் பிரதேச செயலாளர்களும் மற்றும் நிமால் குமாரசிங்க (நாரா நிறுவனம்)கமல் தென்னகோன் (Nara Dg)ஆளுனர் சபை உறுப்பினர்கள் மற்றும் நாரா நிறுவன சிரேஸட விஞ்ஞானி திரு அருளானந்தம் ஏனைய விஞ்ஞானிகள் ,பனிப்பாளர்கள் நிறுவன அதிகாரிகள் பணியாளர்கள், நக்டா மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு.நிருபராஜ் மற்றும் வடக்கு கடற்படை தளபதி றியல் அட்மிரல் காஞ்சன பான கொட என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

images/content-image/1712305957.jpg

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை பிரதேச ஆராய்ச்சி நிலைய புதிய கட்டிட தொகுதியின் கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து கட்டிடத்தை நாடா வெட்டி மங்கள விளக்கேற்றப்பட்டு பின் இலங்கையின் தேசிய கீத்த்துடன் உத்தியோகபூர்வமாக கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஅவர்களினால் திறந்து வைத்தார்.

images/content-imagemeta/1712305968.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4