IPL - குஜராத் அணிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு

#IPL #T20 #Gujarat #Lucknow #2024
Prasu
2 years ago
IPL -  குஜராத் அணிக்கு 164 ஓட்டங்கள் இலக்கு

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. 

இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டி காக் 6 ரன்களிலும், அடுத்ததாக களமிறங்கிய படிக்கல் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் கேப்டன் கே.எல். ராகுலுடன் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். இதனால் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. இவர்களில் கே.எல். ராகுல் 33 ரன்களிலும், ஸ்டோய்னிஸ் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதி கட்டத்தில் பூரன் அதிரடியாக விளையாடி அணி கவுரமான நிலையை எட்ட உதவினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் அடித்துள்ளது. 

அந்த அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 58 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக நல்கண்டே மற்றும் உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

 இதனையடுத்து 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி குஜராத் பேட்டிங் செய்ய உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4