புயல் காரணமாக இங்கிலாந்தில் ரத்து செய்யப்பட்ட விமான பயணங்கள்

#Flight #Climate #England #Strom #cancelled
Prasu
2 years ago
புயல் காரணமாக இங்கிலாந்தில் ரத்து செய்யப்பட்ட விமான பயணங்கள்

பிரித்தானியாவில் மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

“கத்லீன்” (Kathleen) புயலுடன் கூடிய பலத்த காற்று மற்றும் வெப்பமான காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்புகளை விடுத்துள்ளன.

அதற்கமைய, விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, பிரித்தானியாவில் சுமார் 140 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மோசமான வானிலையால் ஸ்காட்லாந்தில் ரயில் மற்றும் படகு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 காற்றின் நிலை காரணமாக, பிரித்தானியாவின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் மற்றும் வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4