யாழ். வட இந்து ஆரம்ப பாடசாலை சமூகம் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

#SriLanka #School #Protest #Point-Pedro
Mayoorikka
10 months ago
யாழ். வட இந்து ஆரம்ப பாடசாலை சமூகம் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலை பெற்றோர்கள், பழைய மாணவர்கள் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று காலை 9:45 மணியளவில் முன்னெடுத்தனர்.

 முறையற்ற அல்லது சட்ட விரோதமாக பாடசாலையால் நிதி சேகரிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்திவதற்க்காகவும், பாடசாலையின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முன்னாள் பழைய மாணவர் சங்க நிர்வாகிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், அதே பாடசாலையின் பணியாற்றும் அவரது மனைவியான ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுமே இன்று இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

images/content-image/2024/04/1712743810.jpg

 பாடசாலையில் வாயலில் இருந்து ஆரம்பமான குறித்த கவன ஈர்ப்பு போராட்டம் வடமராட்சி வலய கல்வி அலுவலகம் வரை சென்று வலய கல்வி பணிப்பாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டு போராட்டம் நிறைவடைந்தது. குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன் தான் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

images/content-image/2024/04/1712743823.jpg

 இதேவேளை பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்திரிந்த நிலையில் அங்கு விரைந்த வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் மாணவர்கள், ஆசிரியர்களுடன் பேசி தான் உரிய நடவடிக்கைகளை ஏடுப்பதாக உறுதியளித்திருந்த நிலையில் சில மணி நேரங்களின் பின் வகுப்புக்கள் சுமுகமாக இடம் பெற்றது.

images/content-image/2024/04/1712743838.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!