IPL - மும்பை அணிக்கு சவாலான வெற்றியிலக்கு

#IPL #T20 #Cricket #Mumbai #Bengaluru #2024
Prasu
2 years ago
IPL - மும்பை அணிக்கு சவாலான வெற்றியிலக்கு

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மல்லுக்கட்டுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 3 ரன்களிலும், அடுத்ததாக களமிரங்கிய அறிமுக வீரர் வில் ஜேக்ஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் ஜோடி சேர்ந்த படிதார் - டு பிளிஸ்சிஸ் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை முன்னெடுத்து சென்றனர். படிதார் அரை சதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து சிறப்பாக ஆடி அரைசதமடித்த டு பிளிஸ்சிஸ் 61 ரன்களில் வெளியேறினார்.பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டி 23 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார்.

 இறுதியில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. மும்பை அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 197 ரன்கள் இலக்குடன் மும்பை அணி விளையாடுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4