IPL - டெல்லி அணி அபார வெற்றி

#Delhi #IPL #T20 #Cricket #Lucknow #2024
Prasu
2 years ago
IPL - டெல்லி அணி அபார வெற்றி

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த தொடரில் இன்று லக்னோவில் பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ஆடின.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் ராகுல் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் டி காக் 19 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய படிக்கல் 3 ரன், ஸ்டாய்னிஸ் 8 ரன், பூரன் 0 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல் 39 ரன்னில் அவுட் ஆனார். 

இதையடுத்து இம்பேக்ட் வீரராக தீபக் ஹூடா ஆயுஷ் பதோனியுடன் ஜோடி சேர்ந்தார். இதில் ஹூடா 10 ரன் எடுத்திருந்த போது இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.இதையடுத்து களம் இறங்கிய க்ருனால் பாண்ட்யா 3 ரன்னில் அவுட் ஆனார். 

இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி ஆடியது.

தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் வார்னர் 8 ரன்களுக்கு யாஷ் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜேக் ப்ரேசர்-மெக்கர்க் அதிரடி காட்டினார்.

பிரித்வி ஷா , மெக்கர்க் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அணியின் ஸ்கோர் 63 ரன்னாக இருந்த போது ஷா 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பின்னர் வந்த ரிஷப் பண்ட் மெக்கர்க்குடன் இணைந்து அதிரடி காட்டினார். இருவரும் இணைந்து லக்னோ அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர் . சிறப்பாக விளையாடிய மெக்கர்க் அரைசதமடித்து அசத்தினார். 

இறுதியில் 18.1 ஓவர்கள் முடிவில் 6விக்கெட் இழப்பிற்கு டெல்லி 170 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 6விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மெக்கர்க் 55 ரன்களும் . பண்ட் 41 ரன்களும் எடுத்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4