இங்கிலாந்தில் பொய் குற்றச்சாட்டிற்காக சிறை தண்டனை அனுபவித்த இந்திய பெண் : மன்னிப்பு கோரிய மேலாளர்!
இங்கிலாந்தில் உள்ள ஒரு இந்திய வம்சாவளி அஞ்சல் அலுவலகத்தின் முன்னாள் மேலாளர், சிறை தண்டனை அனுபவித்தமை தொடர்பில் தனது முதலாளியின் மன்னிப்பு கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
இங்கிலாந்தின் அஞ்சல் அலுவலகத்தில் இடம்பெற்ற திருட்டு குற்றத்திற்காக சீமா மிஸ்ரா என்ற குறித்த பெண் 12 ஆண்டுகளுக்கு முன்பு சிறை தண்டனை அனுபவித்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், "நான் எட்டு வார கர்ப்பமாக இருந்தேன். அவர்கள் என் இளைய மகனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் மன்னிப்புகளை ஏற்கவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் போஸ்ட் ஆபிஸில் GBP 75,000 திருடியமையதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில்குறித்த பெண் சிறை தண்டனை அனுபவித்தார். பின்னர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.