ஜேர்மனிய தமிழ் பேராசிரியரால் ஐரோப்பாவில் வெளியிடப்படவுள்ள தமிழ் மொழிக்கான பேரகராதி!

#Tamil #European
Mayoorikka
1 week ago
ஜேர்மனிய தமிழ் பேராசிரியரால் ஐரோப்பாவில் வெளியிடப்படவுள்ள தமிழ் மொழிக்கான பேரகராதி!

ஐரோப்பாவின் தற்போதைய ஒரே தமிழ் பேராசிரியர் ஈவா வில்டன் தலைமையில் தமிலெக்ஸ் எனும் செவ்வியல் தமிழ் மொழிக்கானப் பேரகராதி வெளியாக உள்ளது.

 இந்த திட்டம் சுமார் 100 கோடி செலவில் ஈவா வில்டன் தலைமையில் அவர்களது மாணவர்கள் குழாமும் இணைந்து ஜேர்மனியின் ஹம்பர்க் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இளம் தலைமுறையினரை தமிழறிஞர்களாக வளர்ப்பது இதன் முக்கிய நோக்கமாக உள்ளது.

 தமிழ்நாட்டில் சங்க கால இலக்கியங்களை கற்பிக்கக் கூடிய இடங்கள் அதிகம் இல்லை. அதன் காரணமாக இது போன்ற முயற்சிகள் தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்பவர்களுக்கும் அதனை விரும்பி படிப்பவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

 இதுகுறித்து, ஹம்பர்க் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் ஈவா வில்டன் கூறும்போது, இத்திட்டத்தில் சங்க இலக்கியத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் முழுமையான சொல் அகராதி அடங்கும் என்பது போற்றுதலுக்குரியது. இதனால் தற்கால தலைமுறையினர் சங்க இலக்கியங்களையும் எளிமையான முறையில் கற்கும் வாய்ப்பு ஏற்படுவது திண்ணம் என்று தெரிவித்தார்.

 ஐரோப்பாவின் தற்போதைய ஒரே தமிழ்ப் பேராசிரியரான முனைவர் ஈவா வில்டன், இந்தியாவில் தமிழ் சங்க இலக்கியங்கள் மீதான ஆர்வத்தினால் தமிழறிஞர் தீ. வே.கோபால ஜயரிடம் பயிற்சி மாணவியாக சேர்ந்து பயிற்சி பெற்றார். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் 2015-ம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவர் விருதான குறள் பீடம் விருதை பெற்றவர். 

புதுச்சேரியின் கீழைநாடுகளுக்கான பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் தமிழ்ப் பிரிவின் தலைவராகவும் இருந்த வர். நற்றிணை, குறுந்தொகை, அகநானூற்றின் 1-120 பாடல் களான கழிற்றியானை நிரை ஆகியவற்றின் செம்பதிப்புகளை தலா 3 தொகுதிகளாக ஈவா வில்டன் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.