புற்றுநோய்: அறிகுறிகள்! ஏன் வருகிறது? எப்படிக் கண்டறிவது? சிகிச்சை என்ன?

#Health #cancer
Mayoorikka
2 weeks ago
புற்றுநோய்: அறிகுறிகள்! ஏன் வருகிறது? எப்படிக் கண்டறிவது? சிகிச்சை என்ன?

உலக அளவில் மனிதர்களுக்கு வரும் கொடுநோய்களில் இதய நோய்களை அடுத்து புற்றுநோய்கள்தாம் இருக்கின்றன. உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் வளர்ந்து, கட்டுப்பாடில்லாமல் பெருகி அழிக்கும் நிலையே புற்றுநோய் என்கிற கான்சர். சில நேரங்களில் இது மற்ற உறுப்புகளுக்கு நேரடியாகவோ, ரத்தம் அல்லது நிணநீர் மூலமாகவோ பரவுகிறது.

 புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

 அனைத்து புற்றுநோய்களும் உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் பிரிதலைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் சேதமடைவதால் ஏற்படுகின்றன. மரபணு சேதத்துக்கான காரணங்கள் பல உண்டு… பரம்பரை, தொற்றுகள், நாள்பட்ட வீக்கம், ரசாயன வெளிப்பாடு, கதிர்வீச்சு வெளிப்பாடு, ஹார்மோன் மாற்றங்கள், புகைத்தல், ஆல்கஹால் மற்றும் பல அறியப்படாத காரணிகள்.

 பொதுவான புற்றுநோய்கள் எவை?

 பெண்களில் மிகவும் பொதுவானவை; மார்பகப் புற்றுநோய் (25%), நுரையீரல் (9%), பெருங்குடல் (9%) மற்றும் கருப்பைவாய், கருப்பை, வயிறு ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்கள் (Breasts, lungs, large intestine, cervix, ovary and stomach). ஆண்களுக்கு நுரையீரல் (17%), வாய், வயிறு, பெருங்குடல்(10%) மற்றும் புரோஸ்டேட் (15%) ஆகியவற்றில் பெரும்பாலான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன (Lungs, oral cavity, stomach, colon and prostate).

 புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி? ஆரம்ப நிலையில் கண்டறிவது எப்படி?

புற்றுநோயானது ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறிகளையும் உருவாக்குவதில்லை என்பது ஒரு பெரிய பிரச்சினையே. எனினும், புற்றுநோய்க்கான சோதனைகள் (ஸ்கிரீனிங்) நோயை அறிய பெரிதும் உதவும். புற்றுநோய்க்கான எந்த அறிகுறிகளும் இல்லாதவர்களையும் அடையாளம் காணும் வகையில், இப்போது சில சோதனைகள் செய்யப்படுகின்றன. 

மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மார்பகம், கருப்பைவாய், குடல், புரோஸ்டேட் மற்றும் நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய்களுக்கான பயனுள்ள ஸ்கிரீனிங் முறைகள் உள்ளன. 

images/content-image/2024/04/1713408000.jpg

 புற்றுநோய் தடுப்புக்கான 12 வழிமுறைகள்

புகை வேண்டாம். 

புகையிலிருந்து விலகியிருந்தல் 

எடை பராமரிப்பு 

ஆரோக்கிய உணவு 

பாதுகாப்பான பணியிடம் 

கதிர்வீச்சைத் தவிர்த்தல்

 மருத்துவ பரிசோதனைகள் 

மகளிர் நலம் சூரியக் கதிர்களிடமிருந்து பாதுகாப்பு தடுப்பூசிகள் மது கட்டுப்பாடு உடற்பயிற்சி 

 அனைத்துப் புற்றுநோய்களும் பரம்பரையாக வரக்கூடுமா?

இல்லை… குடும்பங்களில் 10 முதல் 15 சதவிகித புற்றுநோய்கள் மட்டுமே பரம்பரை ரீதியாகப் பரவுகின்றன. மற்ற அனைத்துப் புற்றுநோய்களும் தற்செயலாகவே நிகழ்கின்றன. அதாவது ஒரு குடும்பத்தில் ஒரு நபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் மற்றவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது என்று அர்த்தமல்ல. அதே போல குடும்பத்தில் யாருக்கும் புற்றுநோய் இல்லையென்றால், அந்தக் குடும்பத்தில் ஒரு நபர் புற்றுநோயால் பாதிக்கப்படமாட்டார் என்பதும் உண்மையல்ல. 

 புற்றுநோய்க்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

புற்றுநோய்க்கான சிகிச்சையில் மூன்று முதன்மை முறைகள் உள்ளன. புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரால் செய்யப்படும் அறுவைசிகிச்சைகள். கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணரால் திட்டமிடப்பட்ட கதிர்வீச்சு சிகிச்சை புற்றுநோயியல் மருத்துவரால் வழங்கப்படும் கீமோதெரபி புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் மூலம் புற்றுநோய் கட்டிகளை அகற்றுதலே பெரும்பாலான புற்றுநோய் கட்டிகளுக்கான முக்கிய சிகிச்சை முறையாகும். 

 கட்டிக்கு அருகிலுள்ள பகுதிகளில் கேன்சர் செல்கள் பரவுவதைத் தடுக்கவும், ரத்தம் மூலம் மற்ற உறுப்புகளுக்கு கேன்சர் செல்கள் பரவுவதைத் தடுக்கவும் கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி ஆகியவை கூடுதலாக வழங்கப்படும். இச்சிகிச்சைகள் சுற்றியுள்ள கட்டி செல்களை அழிக்க உதவும். 

 புற்றுநோயிலிருந்து மீள்வதற்கான வெற்றிகரமான சிகிச்சைக்கான காரணிகள் எவை? 

கட்டி இருக்கும் இடம் கட்டியின் நிலை மற்றும் கட்டியின் வகை ஆகியவையே குணப்படுத்துவதற்கான மிக முக்கியமான காரணிகள். முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முழுமையாக குணப்படுத்த முடியும்.

 வராமல் தடுக்க வழியுண்டா?

உடல் செயல்பாடு முக்கியம். உடற்பயிற்சிகளை அன்றாட வழக்கமாக்க வேண்டும். பருமன் அல்லது அதிக எடையைக் குறிப்பது மிக அவசியம். வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும். 

உட்கார்ந்தே இருப்பது, படுத்தே கிடப்பது, சோபாவில் இருந்தபடியே மணிக்கணக்கில் டிவி பார்ப்பது போன்ற நடத்தைகளை குறைக்கவும். வழக்கமான செயல்பாடுகளைவிட மேலும் சில உடல் செயல்பாடுகளைச் செய்வது நலம் பயக்கும். நல்ல உணவு, பானங்களைத் தேர்ந்தெடுத்து ஆரோக்கியத்தைக் காக்கவும்.

 பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் சிவப்பு இறைச்சியை குறைக்கவும். ஒவ்வொரு நாளும் காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடவும். சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுக்குப் பதிலாக முழு தானியங்களைத் தேர்ந்தெடுக்கவும். மது அருந்துபவர் என்றால், உங்கள் உட்கொள்ளலை குறைக்கவும். பெரும்பாலும் புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அவற்றைத் தடுக்கவும் குணப்படுத்தவும் முடியும். ஆகவே, விழிப்புணர்வுடன் செயல்பட்டால் விபரீதங்களைத் தடுக்கலாம்.