கனடா விமான நிலையத்தில் இடம்பெற்ற தங்கக் கடத்தல் : 09 பேர் கைது!
#SriLanka
#Canada
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
7 months ago
ஒரு வருடத்திற்கு முன்னர் டொராண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 09 பேர் தற்போது குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
20 மில்லியன் கனடிய டாலர்கள் ($14.5 மில்லியன்) மதிப்புள்ள 6,600 தங்கக் கட்டிகளும், CA$2.5 மில்லியன் ($1.8 மில்லியன்) வெளிநாட்டு கரன்சிகளும் திருடப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த 09 பேரும் தங்கத்தை உருக்கி, சட்டவிரோத துப்பாக்கிகளை வாங்க பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். அதேநேரம் நகைக்கடை உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களில் சிலர் பொலிஸாருக்குத் தெரிந்தவர்கள் என்றும் சிலர் புதியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.