மீனவர்களுக்காக உருவாக்கப்பட்டுவரும் புதிய சட்டமூல வரைபு குறித்து முல்லைத்தீவில் கலந்துரையாடல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
மீனவர்களுக்காக உருவாக்கப்பட்டுவரும் புதிய சட்டமூல வரைபு குறித்து முல்லைத்தீவில் கலந்துரையாடல்!

கடற்தொழில் மீனவர்களுக்காக உருவாக்கப்பட்டுவரும் புதிய சட்டமூல வரைபு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் (18.04) முல்லைத்தீவில் இடம் பெற்றிருந்தது.  

கடற்தொழில் மீனவர்கள் சார்ந்த புதிய சட்டமூல வரைபொன்று உருவாக்கப்பட்டு வருகின்றது.

 இது தொடர்பாக மாவட்ட ரீதியாக கடற்தொழில் சம்மேளனங்கள் ஊடாக பிரதிநிதிகளுடன் இணைந்து சட்டமூலம் தொடர்பாக கொழும்பு பணிப்பாளர் நாயகத்துடன் இணைந்து முன்னாள் மாகாண எதிர்கட்சி தலைவராக இருந்து தற்போது அமைச்சின் செயலாளராகவுள்ள தவராசா அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு சட்டமூலம் தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகள் பெறப்பட்டு குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.  

குறித்த கலந்துரையாடலில் அமைச்சின் உத்தியோகத்தர்கள் , சமாச உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.  

குறித்த கலந்துரையாடலில் மீன்பிடி நடவடிக்கை உரிமம் வழங்கலின் பொதுவான கோட்பாடுகள், மீன்பிடி உரிமத்தின் கால எல்லை, மீன்பிடி நடவடிக்கை உரிமங்களின் கைமாற்றம், வெளிநாட்டு கலன்கள் மூலம் இலங்கை நிலப்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுதலை தடை செய்தல், இலங்கை நிலப்பரப்புகளில் மீன்பிடி செயற்பாடுகளை நடாத்துவதற்கான மீன்பிடி உரிமமொன்றை புதுப்பித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன.