IPL - சென்னை அணி தோல்வி

#IPL #T20 #Cricket #Chennai #Lucknow #2024
Prasu
2 years ago
IPL - சென்னை அணி தோல்வி

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் ஆடின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர். 

ரச்சின் ரவீந்திரா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் கெய்க்வாட் 17 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து ரகானேவுடன் ரவீந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ரகானே 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் இறங்கிய ஷிவம் துபே 3 ரன், இம்பேக்ட் வீரர் சமீர் ரிஸ்வி 1 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து ஜடேஜாவுடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஜடேஜா 34 பந்தில் அரைசதம் அடித்தார். 

மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மொயீன் அலி 20 பந்தில் 30 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய தோனி, 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 57 ரன்களுடனும் தோனி 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல். ராகுல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

இருவரும் அரைசதம் கடந்த நிலையில், குயின்டன் டி காக் 54 ரன்களிலும், கே.எல்.ராகுல் 82 ரன்களிலும் அவுட் ஆகினர். இந்த நிலையில் 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு லக்னோ அணி 180 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. 

நிக்கோலஸ் பூரான் 23 ரன்களுடனும் மார்கஸ் ஸ்டோனிஸ் 8 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இதையடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அபார வெற்றி பெற்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4