இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை பெண்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை பெண்!

இந்தியாவில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் இந்திய பொதுத் தேர்தலில் வாக்களித்துள்ளார். 

38 வயதான கே. நளனி, இந்தியத் தேர்தலுக்காக வாக்களித்த முதல் இலங்கை அகதி என்ற பெருமையைப் பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அவர்  1986 இல் இந்தியாவின் தமிழ்நாடு மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பிறந்தார். இவரது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்கள். 

நளினியின் குடும்பத்தின் பல தலைமுறையினர் முன்னர் இலங்கைக்கு தோட்டங்களில் வேலை செய்வதற்காக புலம் பெயர்ந்தவர்கள்.  

அதன்படி, 1950 முதல் 1987 வரை  அகதிகள் முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு வாக்களிக்க விண்ணப்பிக்கும் வாய்ப்பை வழங்க இந்திய அரசு முடிவு செய்திருந்தது. இருப்பினும், தேவையான தகுதிகளை பூர்த்தி செய்யுமாறு நளனி செப்டம்பர் 2022 இல் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

 அங்கு அவர் இந்தியாவில் பிறந்ததால் வாக்களிக்கும் திறன் கொண்டவர் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, திருச்சி மக்களவைத் தொகுதியின் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்ட நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வெற்றி பெற்றார்.  

அதன்படி, 38 வயதான நளினி, இந்தியத் தேர்தலுக்காக வாக்களித்த முதல் இலங்கை அகதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.