மன்னாரில் ஸ்மாரட் எதிர்காலம் நடமாடும் சேவை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
மன்னாரில் ஸ்மாரட் எதிர்காலம் நடமாடும் சேவை!

ஜனாதிபதியின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் மன்னாரிற்கு ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை இன்றைய தினம் (20.04) மன்னார் நகரசபை மைதானத்தில் ஆரம்பமாகி உள்ளது.

குறித்த நடமாடும் சேவை நாளை ஞாயிற்றுக்கிழமை(21.04)மாலை வரை இடம்பெறும்.  

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் குறித்த நடமாடும் சேவை இடம்பெற்று வருகின்றது.   

குறித்த நடமாடும் சேவையில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளடங்களாக திணைக்கள தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள் பாடசாலை மாணவர்கள்,இளைஞர் யுவதிகள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  

images/content-image/1713607442.jpg

குறித்த நடமாடும் சேவையில் 36 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளதுடன் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் உள்நாட்டு தொழில் முறைமையிலான வேலை வாய்ப்புகளும் குறித்த நடமாடும் சேவையுடாக வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

குறிப்பாக இஸ்ரவேல் தொழில்களை பதிவு செய்தால் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை பெறுவதல்.குறித்த நடமாடும் சேவை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

மேலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலைகளுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.   

அத்துடன் வெளிநாடுகளுக்கு சென்று சட்ட ரீதியாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள எத்தனித்துள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்,யுவதிகள் குறித்த நடமாடும் சேவையில் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.