IPL - 210 ஓட்டங்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

#IPL #T20 #Cricket #Chennai #Lucknow #2024
Prasu
1 week ago
IPL - 210 ஓட்டங்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி , சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெயிக்வாட் , ரகானே ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ரகானே 1 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

தொடர்ந்து வந்த டேரில் மிட்சேல் 11ரன்களும் , ஜடேஜா 17ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஷிவம் துபே களமிறங்கினார் . மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து ஆடினார். 

சிறப்பாக விளையாடிய அவர் அரைசதம் அடித்தார். ஷிவம் துபே , ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் இணைந்து அதிரடி காட்டினார்.

அரைசதம் கடந்த பிறகு பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட ருதுராஜ் கெய்க்வாட் 56பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் .

 மறுபுறம் ஷிவம் துபே 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 211 ரன்கள் இலக்குடன் லக்னோ அணி விளையாடுகிறது.