கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புதிய CT ஸ்கேன் இயந்திரம் இணைப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புதிய  CT ஸ்கேன் இயந்திரம் இணைப்பு!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 220 மில்லியன் ரூபா பெறுமதியான CT ஸ்கேன் இயந்திரம் இன்று (24) சிகிச்சை சேவைகளுடன் இணைக்கப்பட்டது.  

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தலைமையில் இது இடம்பெற்றது.  

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன CT ஸ்கேன் இயந்திரம் சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. 

நாளொன்றுக்கு 40 முதல் 50 சி.டி ஸ்கேன்கள் மேற்கொள்ளப்படும் என்றும், எதிர்காலத்தில் அந்த வரம்பை மீறி சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும், இதன் மூலம் சிடி ஸ்கேன் பரிசோதனைக்கான காத்திருப்பு பட்டியலை குறைக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஆண்டில் வைத்தியசாலையின் பௌதீக வளங்கள் மற்றும் ஒட்டு மொத்த வைத்திய உபகரணங்களை அபிவிருத்தி செய்வதற்கு 100 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.