IPL - பிரபல ஐதராபாத் அணியை வீழ்த்திய பெங்களூரு

#IPL #T20 #Cricket #hyderabad #Bengaluru
Prasu
2 years ago
IPL - பிரபல ஐதராபாத் அணியை வீழ்த்திய பெங்களூரு

ஐ.பி.எல்., கிரிக்கெட் திருவிழாவில், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. 

அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக விராட் கோலி, டு பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடி காட்டினர். 

தொடக்க விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்த நிலையில் டு பிளசிஸ் 12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வில் ஜாக்ஸ் 6 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறக்கிய ரஜத் படிதார் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார். விராட் கோலி மற்றும் படிதார் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். 

இருவரும் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் கேமரூன் கிரீன் அதிரடியாக விளையாடி 37 ரன்கள் எடுத்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக ஜெயதேவ் உனத்கட் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணியின் சார்பில் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். 

இந்த ஜோடியில் டிராவிஸ் ஹெட் 1 ரன்னில் கேட்ச் ஆகி ஐதராபாத் அணியின் ரசிகர்கள்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த அபிஷேக் சர்மா 31 ரன்களில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மார்க்ரம் 7 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 7 ரன்களும், நிதிஷ் ரெட்டி 13 ரன்களும், அப்துல் சமத் 10 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 

பெங்களூரு அணியினரின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஐதராபாத் அணி வீரர்கள் திணறினர். அடுத்ததாக ஷபாஸ் அகமதுவுடன், கேப்டன் பேட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். 

இந்த ஜோடியில் அதிரடியாக ரன்கள் சேர்த்த பேட் கம்மின்ஸ் 31 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய புவனேஷ்வர் குமார் 13 ரன்களில் கேட்ச் ஆனார். இறுதிவரை போராடிய ஷபாஸ் அகமது 40 (37) ரன்களும், உனத் கட் 8 (10) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

பெங்களூரு அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய கேமரூன் கிரீன், சுவப்நில் சிங் மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், வில் ஜாக்ஸ், யாஸ் தயாள் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4