உங்கள் பெயர் “L” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

#people #Lifestyle #Numerology
Prasu
11 months ago
உங்கள் பெயர் “L” எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்படியானால் இதுதான் உங்கள் வாழ்க்கை

L என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டவர்களின் குணாதிசியங்கள் மற்றும் பலம்

L என்ற முதல் எழுத்து உள்ளவர்கள் தலைசிறந்த மனிதர்களாக இருப்பார்கள். அடக்கம், பொறுமை, நிதானம், பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள். 

எந்த வேலையை செய்தாலும் நிதானமாக நடந்துக் கொள்வார்கள். இது இவர்களுடைய அடிப்படையான குணம் என்று சொல்லலாம். 

தாம் எப்படி பெரியவர்களுக்கு அடங்கி நடப்பது போல் இவர்களுக்கு கீழ் உள்ளவர்கள் இவருக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.இவர்கள் அதிகமான உழைப்பாளியாக இருப்பார்கள். 

images/content-image/1714341996.jpg

இவர்களுக்கு கீழ் வேலை செய்பவரை அதிகாரத்துடனும், தைரியாமாகவும் வேலை வாங்கும் திறமை இவர்களுக்கு உண்டு. எந்த வேலையை செய்தாலும் நியாமாக தான் செய்து முடிப்பார்கள். 

இவர்களிடம் நிறையப்பேர் உதவிக்கேட்டு வாங்குவார்கள். இவர்கள் பெருந்தன்மை உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் சொந்த வேலையை விட பொது வேலையை அதிகமாக செய்வார்கள். 

யார் உதவிக் கேட்டாலும் இல்லை என்ற வார்த்தை சொல்ல மாட்டார்கள். யாருடைய உதவியில்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியில் உயர்ந்த நிலையில் நிற்பார்கள். இவர்கள் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.

images/content-image/1714342005.jpg

ஒருபொழுதும் சக்திக்கு மீறி ஆசைப்பட மாட்டார்கள். எந்த நிலையில் இருந்தாலும் திருப்தியுடன் வாழ்வார்கள். எந்த வேலை செய்தாலும் பின்வாங்கவும் மாட்டார்கள். துணிச்சலுடன் எதையும் செய்பவர்களாக இருப்பார்கள். 

எந்த எதிர்ப்பு வந்தாலும் நான் பார்த்துக்கொள்வேன் என்று சொல்வார்கள். விரோதிகளிடமிருந்து தனித்து போராடுவார்கள். மனதில் எதையாவது சாதிக்க நினைத்தால் அதை சாதிக்கும் வரை விடாமல் போராடுவார்கள். 

நண்பர்களுக்கு நிறைய பணவிஷயத்தில் உதவி செய்வார்கள். நிறைய செலவும் செய்வார்கள். வெளிநாட்டிற்கு போக வேண்டுமென்று மிகவும் ஆசைப் படுவார்கள். அரசியல் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

images/content-image/1714342015.jpg

  • அடக்கம், பொறுமை, நிதானம் கொண்டவர்கள்.
  • பெரியவர்களிடம் மரியாதை.
  • கடின உழைப்பாளி.
  • மற்றவர்களுக்கு உதவும் குணம்.
  • துணிச்சல் மிக்கவர்கள்.
  • போராடும் குணம்.
  • பொது வேலையில் ஆர்வம்.
  • அரசியல் மிகவும் பிடிக்கும்.
  • பழமைவாதி.
  • முன்னோர்களை பின்பற்றுதல்.
  • யாரிடமும் உதவி கேட்கமாட்டார்கள். 
  • யாருடைய யோசனையும் இவர்கள் கேட்கமாட்டார்கள்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!