இங்கிலாந்தில் பாண், பீர், பிஸ்கட் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

இங்கிலாந்தில் பாண், பீர், பிஸ்கட் ஆகியவற்றின் விலைகள் இந்த ஆண்டு அதிகரிக்கலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கோடை மற்றும் குளிர் காலத்தில் கோதுமை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் மேற்படி விலை அதிகரிக்கு சாத்தியப்படும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கோதுமை, ஓட்ஸ், பார்லி மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி 2023 உடன் ஒப்பிடும்போது நான்கு மில்லியன் டன்கள் (17.5%) குறையும் என்று ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரமான வானிலை காரணமாக குறைந்த அளவிலான நடவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் மோசமான வானிலை பயிர்கள் அழிவடைய காரணமாகியுள்ளது. இதன்காரணமாக உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும் மோசமான வானிலையால் வரும் மாதங்களில் உருளைக்கிழங்கின் விலை அதிகரிக்கும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.



