நோயாளர் காவு வண்டியை வழிமறித்து யானைகள் அட்டகாசம்!

#SriLanka #Vavuniya #Elephant
Mayoorikka
2 years ago
நோயாளர் காவு வண்டியை வழிமறித்து யானைகள் அட்டகாசம்!

வவுனியா செட்டிகுளம் ஊடாக மன்னார் செல்லும் பிரதான வீதியில் யானைகள் வீதியை குறுக்கறுத்து அட்டகாசம் செய்கின்றன பறயனாளங்குளம் பகுதியிலேயே இச்சம்பவம் இன்றுகாலை(30) நிகழ்ந்துள்ளது.

 குறித்த பகுதியில் தொடர்ச்சியாக யானைகள் வீதியில் நின்று போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் இதே பகுதியில் பல மின்கம்பகளை உடைத்து யானைகள் சேதமாக்கியிருந்தன இந்நிலையில் இன்று காலை நோயாளர்களை ஏற்றிவந்த நோயாளர் காவு வண்டியையும் வழிமறித்ததுடன் நீண்ட நேரமாக போக்குவரத்துக்கு இடையூறாக வீதியில் நின்று பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்துள்ளது.

 மேலும் இவ்வீதியூடாக பயணிப்பவர்களும் அன்மித்து உள்ள கிராமவாசிகளும் உயிர் அச்சுறுத்தலுடனேயே எந்நேரமும் காணப்படுகின்றனர் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..?

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4