மே தினக் கூட்டத்திற்கு கட்சிகள் பணம் செலுத்தினால் பேருந்து வழங்கப்படும் - பந்துல திட்டவட்டம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மே தினக் கூட்டத்திற்கு கட்சிகள் பணம் செலுத்தினால் பேருந்து வழங்கப்படும் - பந்துல திட்டவட்டம்!

மே தினக் கூட்டத்துக்கு எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பணம் செலுத்தாமல் பேருந்துகளை வழங்க வேண்டாம் என்று இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.  

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (30) இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பணம் செலுத்தாமல் எந்தவொரு கட்சிக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் மே தினக் கூட்டத்துக்காக வழங்கப்பட மாட்டாது. 

இது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

பொது போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது தொழிற்சங்கத்துக்கும் பணத்தைச் செலுத்திய பின்னர் பேருந்தினை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4