நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

#SriLanka #weather #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கருத்துப்படி, இன்று (01.05) பிற்பகல் வேளையிலும் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னுரைத்துள்ளது. 

திணைக்களத்தின் அறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், சுமார் 2.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

இதேவேளை, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடமேற்கு மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.  

இடியுடன் கூடிய மழை,தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கேட்டுக்கொள்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4