கனடாவில் ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : நால்வர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
7 months ago
டொராண்டோவின் கிழக்கே நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறான வழியில் சென்ற வாகனத்தை பொலிஸார் பின் தொடர்ந்தபோது குறித்த வாகனம் வேறு ஒரு வாகனத்தில் மோதியுள்ளது. இதனால் தொடர்ச்சியாக ஆறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டி மற்றும் அவர்களின் பேரப்பிள்ளை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அதேநேரம் பொலிஸார் துரத்திய வாகனத்தில் இருந்த நபரும் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகைளை முன்னெடுத்து வருவதாக அறித்துள்ளனர்.