காங்கேசன்துறை- நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும்!

#India #SriLanka #Kangesanthurai #Ship
Mayoorikka
2 years ago
காங்கேசன்துறை- நாகப்பட்டினம்  கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும்!

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்குமிடையிலான கப்பல் சேவை மே நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

 உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று வியாழக்கிழமை(02.05.2024) மட்டக்களப்பு காந்திபூக்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

 இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரம் (ஜனா), மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

 காங்கேசன்துறைக்கு நாகப்பட்டினத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் சேவையை ஆரம்பித்தல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. மே மாதத்தின் நடுப்பகுதியில் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

 இந்நிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைத்தல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர், அது தொடர்பில் நிலத்தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்து வருகிறோம். முதலாவது கட்ட பேச்சுக்கள் நிறைவடைந்துள்ளன. இரண்டாவது கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. 

இது நீண்டகாலத் திட்டம் என்ற வகையில் இது ஒரு சில வருடத்தில் நிறைவடையக்கூடியதல்ல எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4