வவுனியாவில் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் : பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வவுனியாவில் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் : பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். 

இந்நிலையில் விபத்து தொடர்பில்  பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரவூர்தியுடன் பொலிஸ்  உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. 

இதில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடம்பெற்ற இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் பாரவூர்தியின் சாரதியினையும் கைது செய்துள்ளனர்.  

மேலும் இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4