IPL - ராஜஸ்தான் அணிக்கு 202 ஓட்டங்கள் இலக்கு

#IPL #T20 #Cricket #hyderabad #Rajasthan
Prasu
2 years ago
IPL - ராஜஸ்தான் அணிக்கு 202 ஓட்டங்கள் இலக்கு

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். 

இவர்களில் அபிஷேக் சர்மா இந்த முறை ஏமாற்றம் அளித்தார். அவர் 12 ரன்களில் ஆவேஷ் கான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கை கோர்த்த நிதிஷ் ரெட்டி - டிராவிஸ் ஹெட் இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில், டிராவிஸ் ஹெட் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அரைசதம் அடித்த பிறகும் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் கிளாசென் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 42 ரன்களை குவித்தார்.

இதன் மூலம் ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்துள்ளது. 

அந்த அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ராஜஸ்தான் பேட்டிங் செய்ய உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4