பாரிஸில் வீதியில் நடந்து சென்ற பெண்ணுக்கு நடந்த விபரீதம்!
#France
#Abuse
Mayoorikka
11 months ago

பாரிஸ் வீதியில் நடந்து சென்ற பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 30 ஆம் திகதி நேற்று இரவு இச்சம்பவம் பரிசில் இடம்பெற்றுள்ளது. 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Place Auguste-Barron வீதியில் நள்ளிரவு 2 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. வீதியில் நடந்து சென்ற பெண் ஒருவரை மர்ம நபர் ஒருவர் பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
பின்னர் குறித்த வீதியில் வைத்து அவரை மடக்கிப் பிடித்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்ட போது, வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த 93 ஆம் நிர்வாகப்பிரிவு காவல்துறையினர் (BAC 93N) சம்பவத்தினை பார்வையிட்டு, அதனை தடுத்து நிறுத்தனர்.
பாலியல் தாக்குதல் மேற்கொள்ள முற்பட்டவர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் இலேசான காயங்களுக்கு உள்ளானார்.



