IPL - 12 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையை சொந்த மண்ணில் வீழ்த்திய கொல்கத்தா

#IPL #T20 #Kolkatta #Mumbai #2024
Prasu
2 years ago
IPL - 12 ஆண்டுகளுக்கு பிறகு மும்பையை சொந்த மண்ணில் வீழ்த்திய கொல்கத்தா

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பில் சால்ட் 5 ரன்களிலும், சுனில் நரைன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் கை கோர்த்த வெங்கடேஷ் ஐயர் - மனீஷ் பாண்டே இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அரைசதம் அடித்தார். மனீஷ் பாண்டே 42 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதனையடுத்து களமிறங்கிய ரசல் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். 19.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த கொல்கத்தா 169 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்கள் அடித்தார். 

மும்பை தரப்பில் நுவான் துஷாரா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளும், பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை பேட்டிங் செய்தது. 

கொல்கத்தா அணியை போல மும்பை அணிக்கும் ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா (11), இஷான் கிஷன் (13), திலக் வர்மா (4), நமன் திர் (11), நேஹல் வதேரா (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் பாண்ட்யா (1) வந்த வேகத்தில் நடையை கட்டினார். 

இதனால் மும்பை அணி 76 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. எனினும், சூர்யகுமார் யாதவ், தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அரைசதம் அடித்த அவர், 56 ரன்களில் கேட்ச்சாகி வெளியேறினார்.

இறுதியில் மும்பை அணி 18.5 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தை தக்கவைத்துக்கொண்டது. 

கொல்கத்தா தரப்பில் மிட்சேல் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி, 3 வெற்றி, 8 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அத்துடன், மும்பை அணியின் பிளே ஆப் கனவும் இன்றைய தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4