போரில் ரஷ்யாவின் இராணுவ தோல்வி தெளிவாக தெரிகிறது - பிரான்ஸின் மதிப்பீடு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

உக்ரைன் போரில் 150,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் மதிப்பிடுகிறது.
அதேபோல் போரில் ரஷ்யா ஏறக்குறைய 500000 வீரர்களை இழந்துள்ளதாகவும் மதிப்பிட்டுள்ளது.
ஐரோப்பாவும் அதன் பங்காளிகளும் தேவையான வரை ஒற்றுமையாகவும் உறுதியாகவும் இருப்பார்கள். ரஷ்யாவின் இராணுவத் தோல்வி ஏற்கனவே தெளிவாகத் தெரிகிறது என்றும் பாரிஸை தளமாக கொண்ட செய்தி நிறுவனம் ஒன்றும் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை 180,000 ரஷ்ய துருப்புக்கள் போரில் கொல்லப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பிப்ரவரியில் மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



